பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை மக்களையும்தான்: நீதிமன்றம்

பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை மக்களையும்தான்: நீதிமன்றம்பூஜா கேத்கர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை மக்களையும்தான் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

புது தில்லி: மோசடி செய்து ஐஏஎஸ் ஆன பூஜா கேத்கரின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், இவர் யுபிஎஸ்சி-ஐ மட்டும் ஏமாற்றவில்லை, மக்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

போலியான ஓபிசி சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் அளித்து, யுபிஎஸ்சி தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளையும் தாண்டி பெயரை மாற்றி தேர்வெழுதியதாக ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பூஜா கேத்கர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எந்தவிதமான சலுகைகளை வழங்கினாலும், அது இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்களையே வேறருத்துவிடும் என்று கூறி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறை நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறது.

யுபிஎஸ்சி தேர்வுகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் பூஜா கேத்கரின் நடவடிக்கைகள் இருந்தையும் காவல்துறை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29 வரை ஒத்திவைத்து, அதுவரை பூஜா கேத்கரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்