பெங்களூரில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்தது: 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்

பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கர்நாடக மாநிலம், பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது 17 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து இரண்டு மீட்பு வேன்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நகரத்தில் பலத்த மழை பெய்து வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையின்படி, கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மக்கள் அடியில் சிக்கியதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி