பெங்களூருவில் ஒரு ஷ்ரத்தா மாடல் கொலை.. அதிர்ச்சி தரும் பின்னணி!

பெங்களூருவில், 29 வயது பெண் கொலை செய்யப்பட்டு அவரது உடல் வெட்டப்பட்டு துண்டுத் துண்டாக குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சம்பவத்தில, முக்கிய குற்றவாளியின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், 29 வயதான மகாலட்சுமி கொலை வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர், அவர் வசித்து வந்த வீட்டில் இருக்கும் குளிர்பதனப் பெட்டியிலிருந்து 50 துண்டுளுக்கும் மேல் வெட்டப்பட்டிருந்த பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள சிறிய வீடு ஒன்றில் மகாலட்சுமி வசித்துவந்தநிலையில், அவர் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்துக் கோணங்களிலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவர், பெங்களூருவில் தங்கியிருந்தவர் என்றும், குற்றவாளியைப் பற்றி மேலும் தகவல்களை சொல்ல முடியாது, அவர் எளிதாக தப்பிச் செல்ல காரணமாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அப்பெண்ணின் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் பக்கத்தில் நீல நிற சூட்கேஸ் இருந்ததாகவும், அதில் பெண்ணின் உடல்பாகங்கள் வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியிருந்தனர்.

இதனால், கொலை செய்தவர், பெண்ணின் உடலை வேறு எங்கேனும் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தாரா? அல்லது வேறு எங்கும் கொலை செய்து கொண்டு வந்தாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது.

உடல்கூறாய்வு முடிவுகளுக்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வந்தால்தான், விசாரணையில் அடுத்த நகர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க.. ஊருக்குப் பேருந்து.. டிசம்பர் முதல் ஊரகப் பகுதிகளிலும் சிறிய பேருந்து சேவை

பெங்களூரு அதிர்ச்சி

செப்டம்பர் 21ஆம் தேதி, இந்த சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகே இருப்பவர்கள், துர்நாற்றம் வீசுவதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து இங்கு காவல்துறையினர் வந்து சோதனை செய்தனர்.

அதில், ஐந்து நாள்களுக்கு முன்பு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல்கள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டதை கண்டறிந்தனர்.

முதற்கட்ட தகவலில், மகாலட்சுமி குடும்பத்தினர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 35 ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகத்தில் வந்து தஞ்சமடைந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மகாலட்சுமி பிறந்தது வளர்ந்தது எல்லாமே பெங்களூரு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!