பெங்களூரு – கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சோதனை அடிப்படையில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

சேலம்,

கச்சிகுடா- மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12789) மற்றும் மங்களூரு-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12790) சேலம் வழியாக வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் கேரள மாநிலம் நைல்ஸ்வேர் ரெயில் நிலையத்தில் தற்போது சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கோவை உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22665) மற்றும் கோவை- கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை அடிப்படையில் திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். மறு உத்தரவு வரும் வரை இந்த 2 ரெயில்களும் நைல்ஸ்வேர், திருப்பத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!