பெங்களூரு டிராஃபிக்… வைரலாகும் கூகுள் மேப் தகவல்…

‘பெங்களூருவில் காரை விடவும் நடந்து சென்றால் வேகமாக செல்லலாம்’ – வைரலாகும் கூகுள் மேப் தகவல்…

பெங்களூரு டிராஃபிக்

பெங்களூருவில் காரில் செல்வதை விடவும் நடந்து சென்றால் வேகமாக செல்லலாம் என கூகுள் மேப் தகவல் தெரிவித்துள்ளது. பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை கடுமையாக விமர்சிக்கும் வகையில் அமைந்த இந்த தகவல், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக பெங்களூரு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்த போதிலும், போக்குவரத்து நெரிசல் பெங்களூருக்கு அவப்பெயரை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

விரைவான நகரமயமாக்கல், மோசமான திட்டமிடல், பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகம் பயன்படுத்தாதது உள்ளிட்டவை இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இதனால் அன்றாடம் பணிக்கு செல்வோர், பள்ளி குழந்தைகள் என ஏராளமானோர் பாதிப்பு அடைகின்றனர்.

விளம்பரம்

இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்த முடியாமல் அரசு நிர்வாகங்கள் திணறி வருகின்றன. இந்த நிலையில் கூகுள் மேப் வெளியிட்ட தகவல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதாவது பெங்களூருவில் பிரிகேட் மெட்ரோ போலீஸிலிருந்து கே.ஆர். புரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு காரில் செல்வதை விடவும் நடந்து சென்றால் சீக்கிரம் இடத்தை அடையலாம் என்று கூகுள் மேப் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க – திருடச் சென்ற வீட்டில் திருடன் செய்த வினோத செயல்… வைரலாகும் சிசிடிவி பதிவு… என்ன நடந்தது?விளம்பரம்

இந்த தகவலை ஆயுஷ் சிங் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சுமார் 15,000 லைக்குகள் குவிந்துள்ளன. அந்த பதிவில் காரில் சென்றால் 44 நிமிடங்களிலும், நடந்து சென்றால் 42 நிமிடங்களிலும், ரயில் மூலம் செல்வதாக இருந்தால் 13 நிமிடங்களிலும் இடத்தை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

This happens only in Bangalore pic.twitter.com/MQlCP7DsU7

— Ayush Singh (@imabhinashS) July 25, 2024

விளம்பரம்

இந்த எக்ஸ் தள பதிவுக்கு கமெண்டுகள் குவிந்து வருகின்றன. 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பதிவை பார்த்துள்ளார்கள். பெங்களூருவில் மட்டும்தான் இது போன்ற மோசமான சம்பவம் நடக்கும் என்று ஆயுஷ் சிங் தனது பதிவில் கூறியுள்ளார். இந்த பதிவை ஆதரித்தும் விமர்சித்தும் கமெண்டுகள் குவிந்துள்ளன.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bengaluru
,
Google map

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை