பெங்களூரு: பெண்ணிடம் ரகளையில் ஈடுபட முயன்றவர்கள் கைது

பெங்களூரு: பெண்ணிடம் ரகளையில் ஈடுபட முயன்றவர்கள் கைதுவிரைந்து செயல்பட்டதாக காவல்துறையினருக்கு பாராட்டு

பெங்களூருவின் ஹென்னூர் பாகலூர் சாலையில் பெண் ஒருவர் கடந்த மாதம் 25ஆம் தேதியில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே, சிலர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

அவர்கள் அந்தப் பெண்ணின் காரை வழிமறித்து, காரின் உள்ளே செல்ல முயன்றுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் பெண் துரிதமாகச் செயல்பட்டு, காரை வேகமாக ஓட்டிச் சென்று, அவர்களிடமிருந்து தப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் முழுவதும் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, பெண்ணின் கணவர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு, பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, பெண்ணின் கணவர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து, அவரிடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் எக்ஸ் பதிவு சில மணிநேரங்களிலேயே 5000 பார்வைகளையும், 600 லைக்குகளையும் பெற்றது. பெங்களூரு காவல்துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்