மத்திய அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனை முகவா்களுக்கு அளிக்கும் கமிஷன் தொகையை அதிகரித்துள்ளன. எனினும் பெட்ரோல், டீசல் விலையை அந்த நிறுவனங்கள் மாற்றவில்லை.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் காா்ப்பரேஷன் ஆகிய எரிபொருள் விற்பனை நிறுவனங்கள், முகவா்களுக்கு பெட்ரோல் விற்பனைக்கு அளிக்கும் கமிஷன் தொகையை லிட்டருக்கு 65 பைசாவும், டீசல் விற்பனைக்கு அளிக்கும் கமிஷன் தொகையை லிட்டருக்கு 44 பைசா அதிகரித்துள்ளன.
இதேபோல மாநிலங்களுக்குள்ளான சரக்கு வரியையும் அந்த நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. இதனால் ஒடிஸா, சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4.5 வரை குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படவில்லை.