பெண்களை தவறாக விடியோ எடுத்த போக்குவரத்து காவலர்: பிடித்து கொடுத்த பொதுமக்கள்!

கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே பெண்களை தவறாக விடியோ போக்குவரத்து காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஒருவர் தனது செல்போனில் அந்த வழியாக செல்லும் பெண்களை விடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த நபரை பிடித்து எதற்காக விடியோ எடுக்கிறாய் என்று கேட்டுள்ளனர். ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க |ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காவலர்கள் நடத்திய விசாரணையில் அவரது பெயர் பாலமுருகன் என்பதும்,போக்குவரத்து காவலராக பணிபுரிவதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் சாய்பாபா காலனி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து அதில் உள்ள விடியோ குறித்த பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!