பெண்கள் டி20 உலகக்கோப்பை; நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். அதேவேளையில், இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இந்தியாவின் நெட் ரன் ரேட்டை விட பாகிஸ்தானின் ரன் ரேட் அதிகமாக இருந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.

ஒருவேளை பாகிஸ்தான் வெற்றி வெற்று அந்த அணியின் ரன் ரேட் இந்தியாவை விட குறைவாக இருந்தால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இதனால் இந்த ஆட்டம் 3 அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Related posts

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த பாகிஸ்தான்

வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; சிறந்த பீல்டர் விருது வென்ற வாஷிங்டன் சுந்தர்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து