பெண்கள் டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கேத்ரின் பிரைஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்

சார்ஜா,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்

இந்த நிலையில், மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கேத்ரின் பிரைஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஸ்காட்லாந்து முதலில் பேட்டிங் செய்கிறது.

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் , ஷாஹீன் ஷா அப்ரிடி நீக்கம்

பெண்கள் டி20 உலகக் கோப்பை – இங்கிலாந்து அணிக்கு 110 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து