பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related posts

டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

பெண்கள் டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் டேனியல் மெத்வதேவ்