பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.

சென்னை,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடர்ந்து தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேநேரத்தில் இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாகும். இதில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி