பெண் கூட்டு பாலியல் வழக்கில் தப்பியோட முயன்றவர்களின் கை, காலில் எலும்பு முறிவு!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பெண்ணை கூட்டு பாலில் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும், தப்பியோட முயன்றதில் பள்ளத்தில் தவறி விழுந்து கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான 42 வயது பெண் கடந்த 3 ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக பூதலூரில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ராயந்தூரை சேர்ந்த பிரவீன் (32), ராஜ்கபூர் (25) இருவரும் வந்துள்ளனர்.

அப்போது அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் லிப்ட் கொடுப்பதாக கூறியள்ளனர். இதனை நம்பி பிரவீனுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.ராஜ்கபூர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளார்.

பூதலூரை தாண்டியதும் ஆள் இல்லாத பாலாயிகுளம் என்ற பகுதியில் சென்றபோது அந்த பெண்ணை பிரவீன், ராஜ்கபூர் இருவரும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த நிலையில், வீட்டிற்கு வருவதாக கூறி, தனது அம்மா வெகுநேரமாகியும் வரா நிலையில்,மகள் தனது தம்பியை விட்டு அம்மாவை தேடி வர சொல்லியுள்ளார்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அப்போது வழியில் தாய் அழுதுக்கொண்டு இருப்பதை பார்த்து மகன் நடந்த விவரங்களை கேட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தாய் நடந்த விவரங்களை கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மகன், இது குறித்து பூதலுார் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரவீன், ராஜ்கபூர் இருவரையும் கைது செய்ய முயன்றபோது,போலீசாரிடம் இருந்து தப்பியோட இருவரும் முயன்றபோது அருகில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்துள்ளாா். இதில் ஒருவருக்கு கையிலும், மற்றொருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவா்கள் இருவரும் தஞ்சாவூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் கடந்த 12 தேதி இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி