பெண் மருத்துவர் பாலியல் கொலை: கொல்கத்தாவில் 15 இடங்களில் சிபிஐ சோதனை

பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் கொல்கத்தாவில் 15 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள பல்வேறு நிதி முறைகேடுகள் புகாா் தொடா்பான விசாரணையையும் சிபிஐ சனிக்கிழமை தன் வசம் எடுத்தது. மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த முறைகேடு தொடா்பாக விசாரித்து வந்த நிலையில், கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மருத்துவமனை நிதி முறைகேடு புகாா் மீதான விசாரணையும் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடா்பான ஆவணங்களை சனிக்கிழமை பெற்ற சிபிஐ அதிகாரிகள், புதிதாக எஃப்ஐஆா் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

நிதி முறைகேடுகள் புகாா் தொடா்பான விசாரணையில், பாலியல் கொலை சம்பவம் நடந்த ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்த மருத்துவா் சந்தீப் கோஷுக்கு சொந்தமான கொல்கத்தாவில் உள்ள அவரது வீடு உள்பட இந்த கொலை வழக்கில் விசாரணை வளையத்தினுள் உள்ள 14 பேருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது.

மத்திய பாதுகாப்புப் படை காவலர்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் இருப்பிடங்களில் இன்று(ஆக. 25) சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். பெலியாகட்டாவில் அமைந்துள்ள சந்தீப் கோஷின் வீட்டுக்கு அதிகாலை 6 மணிக்கே சென்ற அதிகாரிகள் குழு, சுமார் ஒன்றரை மணி நேரம் வீட்டு வாசலுக்கு வெளியே காத்திருந்து, அதன்பின் வீtடில் உள்ளவர்கள் எழுந்து கதவைத் திறந்ததும் வீட்டினுள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வராக இருந்த சஞ்சய் வஷிஸ்த் மற்றும் அம்மருத்துவமனையில் தடயவியல் மருந்தியல் துறை விரிவுரையாளரான மருத்துவர் டெபாஷிஷ் சோம் ஆகியோரது வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!