பென் டக்கெட் சதம்: சாஜித் கான் சுழலில் சிக்கிய இங்கிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சதம் அடித்து அசத்தினார்.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்று வருகிறது.இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத், பேட்டிங்கை தோ்வு செய்தார்.

அதன்படி தனது முதல் இன்னிங்ஸில் அப்துல்லா ஷஃபிக் 7 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த சயிம் அயுப் நிதானமாக ரன்கள் சோ்த்தாா். அயுப் 7 பவுண்டரிகளுடன் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அதிகபட்சமாக கம்ரான் குலாம் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 118 ரன்கள் விளாசினார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 123.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 366 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அசத்தலாக பந்துவீசிய இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளும், மேத்யூ பாட்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையும் படிக்க | உலகக் கோப்பை வெளியேற்றம்..! இந்திய மகளிரணியை கடுமையாக விமர்சித்த மிதாலி ராஜ்!
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர்

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராவ்லி 27 ரன்னில் வெளியேற, ஆலி போப் 29 ரன்களிலும், ஜோ ரூட் 34 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சாஜித் கான் அசத்தலாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தார்.

கடந்த ஆட்டத்தில் முச்சதம் அடித்து அசத்தல் சாதனை படைத்த ஹாரி புரூக் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்கம் முதலே தனது அதிரடியைக் காட்டிய பென் டக்கெட் 16 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.

இதையும் படிக்க | ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது: அலைஸ்டர் குக், ஏபி டிவில்லியர்ஸுக்கு கௌரவம்!

ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணித் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சாஜித் கான் 4 விக்கெட்டுகளும், நோமன் அலி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தற்போது 127 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஜேமி ஸ்மித் 12 ரன்களுடனும், பிரைடன் கார்க்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் நாளை(அக்.17) நடைபெறும்.

இதையும் படிக்க | கிரீனுக்கு பதிலாக பந்துவீச தயாராகும் மிட்செல் மார்ஷ்!

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!