பென் டக்கெட், ஹாரி ப்ரூக் அசத்தல், ஆஸி.க்கு 310 ரன்கள் இலக்கு; தொடரை வெல்லப்போவது யார்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிஸ்டாலில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.

ஐபிஎல் தொடர் 2025-27 ஆம் ஆண்டுக்கான வீரர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு!

309 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 27 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆரோன் ஹார்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், களமிறங்கிய வில் ஜாக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பென் டக்கெட்டுடன் கேப்டன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 52 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 91 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஜேமி ஸ்மித் (6 ரன்கள்), லியம் லிவிங்ஸ்டன் (0 ரன்), ஜேக்கோப் பெத்தெல் (13 ரன்கள்), பிரைடான் கார்ஸ் (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய அடில் ரஷீத் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!

ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆரோன் ஹார்டி, ஆடம் ஸாம்பா மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடரை வெல்லப்போவது யார்?

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றுமா அல்லது ஹாட்ரிக் வெற்றியுடன் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related posts

Mumbai: CBI Initiates Probe Against MTPL Officials In Cheating Case For Over $11 Million Repayment Dues To UCO Bank Singapore

What Are Macadamia Nuts? Learn Its Amazing Health Benefits For Your Body

Guiding Light: Krishna Tattvam