பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ – அணைக்கும் பணி தீவிரம்

கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம்- சோழிங்கநல்லூர் இடையே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளது. இந்த சதுப்பு நிலத்தில் கோர புல்கள் அதிகமாக உள்ளது. சதுப்பு நில பகுதியில் உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்கிறது.

இந்த நிலையில் சதுப்பு நிலத்தின் நடுவில் வளர்ந்து உள்ள கோர புல்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தீ எரிந்ததால் அப்பகுதியில் சென்றவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர். பள்ளிக்கரணை வனத்துறை அதிகாரிகளும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர்.

சதுப்பு நிலத்தின் நடுவே தீப்பிடித்து எரிவதால் உடனடியாக சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. சதுப்பு நிலத்தின் நடுவே தீயை அணைக்க செல்வது எப்படி என அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

அதிக வெயில் காரணமாக தீப்பிடித்ததா அல்லது உயர் அழுத்த மின் கம்பி உரசி தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Related posts

சீனாவில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடும் சரிவு

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்

சபரிமலையில் நேரடி முன்பதிவு மூலமாக தினமும் 10,000 பேர் அனுமதி!