‘பேனர் வைத்தாலும் கூட்டமா வரப்போகிறது என்றெல்லாம்…’- விஜய் சேதுபதி

எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

சென்னை,

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும், நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மகாராஜா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால், படக்குழு சார்பில் நேற்று சென்னையில் விழா ஒன்று நடந்தது. அவ்விழாவில், இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன், நடிகர் விஜய்சேதுபதி எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அந்த பட விழாவில் விஜய்சேதுபதி பேசியதாவது, " இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், கடந்த இரண்டு படங்களுக்கு முன்பு படத்திற்கு பேனர் கட்டும்போது சிலர், 'விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் வைத்தாலும் கூட்டமா வரப்போகிறது' என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், 'மகாராஜா' அதற்கான பதிலாக அமைந்துவிட்டது. படத்தைப் பார்த்து, ரசித்து எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.

"விஜய் சேதுபதிக்கு பேனர் ஏத்துனா மட்டும் கூட்டம் வருமானு கேட்டானுங்க" எமோஷனலாக பேசிய VJS#vijaysethupathi#thanthitv#maharajapic.twitter.com/GmCmk4lySU

— Thanthi TV (@ThanthiTV) June 19, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!