பொக்ரானில் பயிற்சியின் போது மோட்டார் குண்டு வெடித்ததில் 4 வீரர்கள் காயம்

பொக்ரானில் போர் பயிற்சியின் போது மோட்டார் குண்டு வெடித்ததில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் துப்பாக்கி சூடு தளத்தில் கடந்த சில நாட்களாக போர் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பயிற்சியின் போது மோட்டார் குண்டு தவறுதலாக வெடித்தது.

செஸ் ஒலிம்பியாட்: கடந்தமுறை தங்கம் வென்ற அணியுடன் டிரா செய்த இந்தியா!

இந்த சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் (பிஎஸ்எஃப்) சேர்ந்த 4 வீரர்கள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த வீரர்கள் உதய், சுவிமல், ராகுல் குமார் மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் பொக்ரான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் உதய் மற்றும் அபிஷேக்கின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிஎஸ்எஃப் கமாண்டன்ட் அதிகாரி ரன்வீர் சிங் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த வீரர்களைப் பார்வையிட்டு விபத்து குறித்த தகவல்களைச் சேகரித்தார்.

மேலும் விபத்துக்கான காரணத்தை பிஎஸ்எஃப் அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து