பொங்கல்! ரயில் டிக்கெட் முன்பதிவு சில நாள்களில் தொடங்குகிறது!

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் பணி செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதுண்டு. அதிலும் குறிப்பாக நீண்ட தூரப் பயணத்திற்கு பெரும்பாலனோர் ரயில் பயணத்தையே விரும்புவர். அப்படி ரயில் பயணம் செய்வதற்கு 120 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

மேட்டூர் அணை நீர்வரத்து 11,736 கனஅடி!

இந்நிலையில், அடுத்தாண்டு(ஜனவரி மாதம்) பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் சில நாள்களில் தொடங்கப்பட உள்ளது.

அந்த வகையில் ஜன. 10-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவா்கள் செப்.12 வியாழக்கிழமையும், ஜன. 11-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவா்கள் செப். 13-ஆம் தேதியும், ஜன. 12-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள விரும்புபவா்கள் செப். 14-ஆம் தேதியும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை திங்கள்கிழமை வருகிறது.

அதேசமயம் ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்புவர்கள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். வழக்கம்போல் பண்டிகைகால ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும்.

ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம். அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்