பொதுவெளியில் நடந்த பாலியல் வன்கொடுமை… தடுக்காமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி லோகேஷ் என்பவர், கடந்த 4ம் தேதி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில், லோகேஷை கைது செய்தனர். லோகேஷிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை மது அருந்த செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

அதுமட்டுமின்றி, விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின. உஜ்ஜைனில் பரபரப்பான சாலை நடைபாதையில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. மேலும் இதை தடுக்கமால் அதை பார்த்த மக்கள் பலர், அதை வீடியோ எடுத்துள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தின் மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி, "கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை அல்லது ஏதேனும் ஒரு வகையான துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள். முதல்-மந்திரியின் சொந்த தொகுதியில், நடைபாதையில், ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்-மந்திரி மோகன் யாதவ், மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் மோடி ஆகியோர் ஏன் அமைதியாக உள்ளனர்?” என்று கூறியதுடன், பாஜக அரசின்மீது கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை