பொதுவெளியில் பெண் பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்த மக்கள்

பொதுவெளியில் பாலியல் வன்கொடுமை; வேடிக்கை பார்த்த மக்கள்: மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பரபரப்பான நடைபாதையில் பட்டப் பகலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சோகம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபல ஆன்மிக நகரமான உஜ்ஜைன். இந்த நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்றான கொய்லா பாதக்கில் உள்ள நடைபாதையில் நேற்று பெண் ஒருவர் பட்டப் பகலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சுற்றி நின்று பலரும் வேடிக்கை பார்க்க இக்கொடூரம் அரங்கேறியுள்ளது. வேடிக்கை பார்த்தவர்கள் யாரும் இந்த குற்றத்தை தடுக்கவில்லை. மாறாக அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சோகம் என்னவென்றால் இது மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவின் தொகுதியாகும்.

விளம்பரம்

குற்றம் குறித்து உஜ்ஜைன் நகர காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில், “ஒரு பெண் காவல் நிலையத்திற்கு வந்து தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். உடனடியாக ஒரு பெண் அதிகாரி வரவழைக்கப்பட்டு, அவரின் புகாரை கேட்டு மூத்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

லோகேஷ் என்கிற ஒரு நபரை அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்தில் லோகேஷைக் கைது செய்தோம். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவரை மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.” என்று கூறினார்.

விளம்பரம்

இதற்கிடையே, இந்த சம்பவம் காங்கிரஸுக்கும் ஆளும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போரை உண்டாக்கியுள்ளது. முதல்வரின் சொந்த தொகுதியில் பொதுவெளியில் நடந்த இந்தக் குற்றம் குறித்து ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் சரமாரியாக தாக்கிவருகிறது.

Also Read:
ஹரியானா தேர்தலில் போட்டி? – ரயில்வே பணியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி இதுதொடர்பாக பேசுகையில், “கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்திற்கு எதிராக பாஜக நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால், மத்திய பிரதேசத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையான தொல்லைகளை பெண்கள் இங்கு சந்திக்கின்றனர்.

விளம்பரம்

முதல்வரின் சொந்த தொகுதியில் நடைபாதையில் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யும் அளவுக்கு எல்லை மீறியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் மோகன் யாதவ், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? மத்தியப் பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Madhya pradesh

Related posts

டி20 தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் லியம் லிவிங்ஸ்டன்!

இப்போது இயக்கியிருந்தால் அம்பிகாபதியை வேறு மாதிரி எடுத்திருப்பேன்: ஆனந்த் எல். ராய்

ஆந்திர வெள்ள நிவாரணம்: ரூ.25 கோடி வழங்கிய அதானி அறக்கட்டளை!