போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன் வழங்க தமிழக அரசு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வுக் கால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

பணப்பலனில் ஒரு பகுதியை (50 சதவீத பி.எப்.) வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுகிறது. இதில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடியும், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடியும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.5.8 கோடியும், சேலம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.3.6 கோடியும், கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.4.3 கோடியும், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.8 கோடியும், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.3.2 கோடியும், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.2.9 கோடியும் வழங்க வேண்டும்.

இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்திலிருந்து கடிதம் பெறப்பட்டது. இதை கவனமாக பரிசீலித்த அரசு, ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கி ஆணையிடுகிறது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி