போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டிய ஐடி இஞ்சினியர்

போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டிய ஐடி இஞ்சினியர்: என்ன செய்தார் தெரியுமா..?

ஐடி நகரமான புனே எப்போதுமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. அதுவும் ஹின்ஜேவாடி பகுதியில் தொடர்ந்து ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அனைவருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொல்லையிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என நினைத்த சாங்வியை சேர்ந்த ஐடி இன்ஜினியர் ஒருவர் அற்புதமான தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதன் பின்னால் உள்ள சூட்சுமம் என்ன, இது வாகன ஓட்டிகளுக்கும் அன்றாட பயணிகளுக்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

விளம்பரம்

தற்போது ஹிஞ்சேவாடி பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், தினசரி பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக போய்விட்டது. போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் கால தாமதம் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை நேரடியாக பாதிக்கிறது. அதனால் சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஆப்ஷனைத் தேர்வு செய்கிறார்கள். இன்னும் சில ஊழியர்களோ தங்கள் பணி நேரத்திற்கு முன்பே நிறுவனத்தை அடைய பல வழிகளில் முயற்சிக்கின்றனர். ஆனால் இவர்கள் மத்தியில் சாங்வி பகுதியில் வசிக்கும் ஐடி பொறியாளர் ஆர்யா குமார் மட்டும் விதிவிலக்காக இருக்கிறார்.

விளம்பரம்

பணி நிமித்தம் காரணமாக ஆர்யா குமார் தினமும் சங்வியில் இருந்து ஹிஞ்சேவாடிக்கு பயணம் செய்து வருகிறார். அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் விலை உயர்வு, வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆகியவற்றுக்கு தீர்வாக, கடந்த இரண்டு மாதங்களாக தனது எலக்ட்ரிக் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று வருகிறார் ஆர்ய குமார். உண்மையில் அவர் எடுத்த இந்த முடிவு சரியானது எனப் பலரும் இப்போது கூறி வருகிறார்கள்.

OTT தளங்களில் பார்க்க வேண்டிய மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட 10 தமிழ் படங்கள்.!
மேலும் செய்திகள்…

ஆர்யா வைத்திருக்கும் எலக்ட்ரிக் சைக்கிளின் விலை வெறும் ரூ.35 ஆயிரம் மட்டுமே. இதற்கான மின்சாரத்திற்கு மாதம் வெறும் ரூ.20 மட்டுமே இவர் செலவிடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆகும். அதுமட்டுமின்றி எடை குறைந்த இந்த சைக்கிளை எங்கு வேண்டுமானாலும் மடித்து எடுத்துச் செல்லலாம். இதன் காரணமாக தற்போதெல்லாம் ஆர்யா குமார் தனது அலுவலகத்தை குறித்த நேரத்தில் சென்றடைந்து விடுகிறார்.

விளம்பரம்

வேலைக்குச் செல்வோர் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களுக்கும் இதுபோன்ற எலக்ட்ரிக் சைக்கிள்கள் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பிரச்சனையை தீர்க்க புதுமையான வழிகளை கண்டுபிடிக்கும் ஆர்யா குமார் போன்ற ஐடி பொறியாளர்கள் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் தற்போது பாராட்டைப் பெற்று வருகிறார்கள். ஆகையால் இதே போன்ற மேம்படுத்தப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி மற்ற ஐடி பொறியாளர்களும் தங்கள் வேலையை மேம்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Local News
,
Trending News
,
viral

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?