‘போட்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் யோகி பாபு மண்டேலா படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் பூமர் அங்கிள் திரைப்படம் வெளியானது. மேலும் யோகி பாபு, மண்ணாங்கட்டி, சட்னி சாம்பார், வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில் யோகி பாபு, 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் 'போட்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் யோகி பாபுவுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கவுரி ஜி கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைக்க மாதேஷ் மாணிக்கம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ஒரு சர்வைவல் திரில்லர் படமாகும். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

From Script To Sea! #BOAT Making Video Out Now! https://t.co/x6GHQJNfml@Ghibran⚓ #BoatFromAug2nd@iYogiBabu@chimbu_deven@maaliandmaanvi@cde_off@SakthiFilmFctry@sakthivelan_b@Gourayy@Madumkeshprem@GhibranVaibodha@madheshmanickam@Bigprintoffl… pic.twitter.com/kd2AJGqTt8

— Saregama South (@saregamasouth) July 29, 2024

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வரும் ஆகஸ்ட் 2 -ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Original Article

Related posts

பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி

ரிஷப் ஷெட்டி இல்லை…’காந்தாரா’வில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் – ஐசியுவில் அனுமதி