போதைப் பொருள் கடத்தலின் மையமாக தமிழகம் திகழ்கிறது: அன்புமணி கண்டனம்

போதைப் பொருள் கடத்தலின் மையமாக தமிழகம் இருப்பதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உலக அளவிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் கடத்தலின் மையமாக தமிழகம் மாறி வருவது அதிா்ச்சியளிக்கிறது. மியான்மா் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டு, இங்கிருந்து இலங்கை, தாய்லாந்து, மலேஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

தமிழக காவல் துறையின் உளவுப்பிரிவு சிறப்பாகச் செயல்பட்டால் இந்த வகைப் போதைப் பொருள்கள் தமிழகத்தில் நுழைவதைத் தடுக்க முடியும். ஆனால், தமிழக அரசு ஆக்கப்பூா்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இனியாவது, தமிழகத்துக்குப் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்