போதைப் பொருள் வழக்கில் மகன் கைது: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த தந்தை

தனது மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், காங்கிரஸ் தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஹிமாசலில் ஸ்வர்கட் பகுதியில் உள்ள கரகோடாவில் கிரத்பூர்-நெர்சௌக் நான்கு வழிப்பாதையில் தடுப்புகள் அமைத்து, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், புதன்கிழமையில் நடந்த சோதனையின்போது, குமர்வின் தொகுதியின் காங்கிரஸ் தலைவர் ஜாகிர் சிங் மேத்தாவின் மகன் உள்பட 2 பேர், ஒரு டாக்ஸியில் 45.60 கிராம் அளவிலான போதைப்பொருளைக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து, சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், அவர்கள் இருவர் மீதும் போதைப் பொருள் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, தனது தொகுதி தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறி, மாநில காங்கிரஸ் தலைவரிடம் ஜாகிர் சிங் மேத்தா கடிதம் அளித்துள்ளார்.

ஹரியாணா சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநர் உத்தரவு!

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து