போதை பொருட்கள் வைத்திருந்ததாக தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.!

சென்னை ஜெஜெ நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் வைத்திருந்த தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

வலிநிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த விவகாரத்தில் 5 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக பொத்தேரியில், தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்கி இருந்த அறையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த அறைகளில் 1 கிலோ கஞ்சா, அரை கிலோ ஓ.ஜி கஞ்சா, 100 எல்.எஸ்.டி ஸ்டாம்புகள், வலிநிவாரணி மாத்திரைகள் சிக்கின.

மேலும் விசாரணையில் அந்த அறைகளில் தங்கி இருந்த 12 பேரும் ரெடிட் என்ற ஆப் மூலம் போதைப்பொருடளை விற்பனை செய்ததும் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை