போர்ட்பிளேர் பெயர் மாற்றம்.. இனி எவ்வாறு அழைக்கப்படும்?

புது தில்லி: அந்தமான் – நிக்கோபோர் தீவுகளின் தலைநகரான போர்ட்பிளேர் பெயரை ஸ்ரீ விஜய புரம் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் அதிகாரியின் பெயரான ஆர்சிபல்த் பிளேர் பெயர், போர்ட்பிளேருக்கு சூட்டப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக்கால பெயர்கள் உள்ளிட்ட பெயர்களை மாற்றி வரும் மத்திய அரசு, தற்போது அந்தமான் – நிகோபாரின் நுழைவாயிலான போர்ட்பிளேர் பெயரை மாற்ற முடிவு செய்திருக்கிறது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, நாட்டை காலனித்துவ பதிவுகளிலிருந்து முற்றிலும் அகற்றும் வகையில் போர்ட் பிளேயரின் பெயரை "ஸ்ரீ விஜய புரம்" என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, போர்ட் பிளேர் என்பது, காலனித்துவ அடையாளத்தை கொண்டிருப்பதால், ஸ்ரீ விஜய புரம் நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் – நிகோபார் தீவுகளின் தனித்துவத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

அதாவது, இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் வரலாற்றிலும் அந்தமான் – நிக்கோபார் தீவுகளுக்கு என ஒரு முக்கிய இடம் உள்ளது. ஒரு காலத்தில் சோழ அரசின் கடற்படைத் தளமாக விளங்கிய இந்தத் தீவுப் பகுதி இன்று பல வளர்ச்சிகளைக் கண்டுள்ளது.

நமது நாட்டின் மூவர்ணக் கொடியை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதன் முதலில் ஏற்றிய இடமும் இந்த தீவுப்பகுதிதான் என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து