மகனின் திருமணத்தில் கண்கலங்கிய முகேஷ் அம்பானி…

மகனின் திருமணத்தில் கண்கலங்கிய முகேஷ் அம்பானி… இணையத்தை நெகிழ வைத்த வீடியோ!

மகன், மருமகளுடன் முகேஷ் அம்பானி

மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் தந்தையும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி கண்கள் கலங்கினார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமண கொண்டாட்டங்கள் சுமார் ஓராண்டாக உலகமே வியக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் திருமண கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பிரதமர் மோடி வரை ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் 3 ஆம் நாள் கொண்டாட்டமாக மங்கள் உத்சவ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

இதுபோன்ற திருமணம் இனி நடக்குமா என கேட்கும் அளவுக்கு மிக பிரமாண்டமாக தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முகேஷ் அம்பானி நடத்தி வருகிறார்.

திருமண நிகழ்ச்சியில் மணமகனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் தந்தை முகேஷ் அம்பானி கண் கலங்கி நின்றார். இதை பார்த்த மற்றவர்களுக்கும் ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விளம்பரம்

தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவும், உணர்வுகளும் அற்புதமாக உள்ளன என்றும், எந்த தந்தைக்கும் இந்த தருணம் மறக்க முடியாதது என்றும் கூறி நெட்டிசன்கள் மணமக்களுக்கு வாழ்தது தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க – அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டம்… மங்கள் உத்சவ் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட முகேஷ் அம்பானி குடும்பத்தினர்!

நேற்று நடைபெற்ற சுப ஆசிர்வாத நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்ஷி மகள் ஜிவா, கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் சுனில் ஷெட்டி, அதியா ஷெட்டி, கே.எல். ராகுல், ரன்பிர் கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

விளம்பரம்

நடிகை ஐஸ்வர்யா ராய் வண்ணமிகு ஆடையில் தனியாக வந்து பலரின் கண்களுக்கு விருந்து படைத்தார். நடிகை ஸ்ரீதேவியின் மகளான குஷி கபூரும் கண் கவர் ஆடையில் கலக்கினார். நடிகர் ஷாருக் கான் தனது குடும்பத்தினருடன் வந்து விதவிதமாக போஸ் கொடுத்தார். நடிகர் சஞ்சய் தத், ரன்பீர் கபூர் ஒன்றாக அம்பானி மகனை வாழ்த்தும் நிகழ்ச்சிக்கு வந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி