மகளிர் உலகக் கோப்பை: 18 வயதுக்குள்பட்டோருக்கு அனுமதி இலவசம்!

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 18 வயதுக்கு உள்பட்டவர்கள் இலவசமாக நேரில் கண்டுகளிக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன. 18 நாள்களில் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.

லீக் போட்டிகள் துபை, ஷார்ஜா மைதானத்தில் மாறி மாறி நடைபெற இருக்கின்றன. அரையிறுதி ஆட்டங்கள் முறையே துபை மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறுதிப்போட்டி துபையில் நடைபெறவுள்ளது.

டி20 தொடரில் பந்து வீசுவேனா? கேப்டனும் ஆல்ரவுண்டருமான மிட்செல் மார்ஷ் பதில்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி ஜியோஃப் ஆல்லாரிடிஸ் போட்டியைக் காண வரும் 18 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் நுழைவுக்கட்டணம் இலவசம் என்று அறிவித்துள்ளார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிக்கெட் விலை குறைந்தபட்சமாக 5 திர்ஹாம்களாகவும் இந்திய ரூபாய் மதிப்பில் 115 ரூபாய் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டியில், குரூப் ஏ, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

6,0,6,6,6: 37 வயதிலும் அதிரடி காட்டும் கைரன் பொல்லார்ட்! (விடியோ)

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்