மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஸ்மிருதி மந்தனா

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

துபாய்,

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட்டும் (783 புள்ளி), 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும் (756 புள்ளி) உள்ளனர்.

இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் ஏற்றம் கண்டு (738 புள்ளி) 3வது இடத்திற்கு வந்துள்ளார். இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து (727 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (704 புள்ளி) 5வது இடத்திலும் உள்ளனர்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (794 புள்ளி) முதல் இடத்திலும், கேட் கிராஸ் (686 புள்ளி) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட் (686 புள்ளி) 3வது இடத்திலும், இந்தியாவின் தீப்தி ஷர்மா (671 புள்ளி) 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் (639 புள்ளி) 5வது இடத்திலும் உள்ளனர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா