மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான அணிகளை அறிவித்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் ஜூன் 16ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரின் ஒருநாள் போட்டிகள் பெங்களூருவிலும், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் லாரா வோல்வார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி விவரம்: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், சினாலோ ஜாப்டா, மரிசான் கேப், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், சுனே லூஸ், எலிஸ்-மரி மார்ஸ், நோன்குலுலெகோ மலாபா, துமி செக்குகுனே, நோண்டுமிசோ ஷங்கசே, டெல்மி டக்கர்.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி விவரம்: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், சினாலோ ஜாப்டா, மரிசான் கேப், மசபடா கிளாஸ், சுனே லூஸ், எலிஸ்-மரி மார்ஸ், நோன்குலுலெகோ மலாபா, துமி செக்குகுனே, நோண்டுமிசோ ஷங்கசே, டெல்மி டக்கர்.

The Proteas have announced their ODI and Test squads for the upcoming tour of India ️
Details https://t.co/8g6Acxv7Ia

— ICC (@ICC) May 31, 2024

Related posts

‘இவரிடம் எல்லாம் சரியா இருக்கு’- இந்திய இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

ஜோஷ் இங்கிலிஸ் அபார சதம்.. ஸ்காட்லாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

பயிற்சியாளராக கம்பீர் மற்றும் டிராவிட் இடையே உள்ள வித்தியாசம் இதுதான் – ரிஷப் பண்ட்