மகளிர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 122 ரன்களில் சுருட்டி இந்தியா அபார வெற்றி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

பெங்களூரு,

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மந்தனா 117 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெறும் 37.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா 122 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக சுனே லூஸ் 33 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அறிமுக வீராங்கனையான ஆஷா சோபனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா