மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸி.யின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்கும் என முன்னாள் கிரிக்கெட்டர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் துபை மற்றும் ஷார்ஜாவில் கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முதல் போடிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டிகள் அக்டோபர் 20 வரை நடைபெற இருக்கின்றன. மேலும், துபை மற்றும் ஷார்ஜா மைதானங்கள் என மொத்தமாக 23 போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.

குரூப் ஏவில் ஆஸி. 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 2ஆம் இடத்தில் இந்தியா 4 புள்ளிகளுடன் இருக்கிறது.

கடைசியாக நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க:வரலாறு படைத்த ஜானிக் சின்னர்..! இத்தாலியின் முதல் வீரர்!

இந்த வெற்றியுடன் ஆஸி. அணி டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 14 வெற்றிகளைப் பெற்றுள்ளன.

இந்தியா அரையிறுதிக்கு நுழைய வேண்டுமானால் 6 முறை சாம்பியனான ஆஸி.யை நாளை (அக்.13) நடைபெறும் போட்டியில் வீழ்த்தியாக வேண்டும்.

இது குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறியதாவது:

ஆஸி. வீழ்த்துவதற்கான திறமை இந்திய அணியிடம் இருக்கிறது. இருப்பினும் அரையிறுதிக்கான முக்கியமான போட்டியில் வாழ்வா சாவா என்ற நிலையில் முன்னாள் சாம்பியனை சந்திப்பது சற்று சவாலான விஷயமாகவே இருக்கும். கடினமான சவாலாக இருந்தாலும் இந்திய அணி அழுதத்துக்கு உள்படாமல் விளையாடினால் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்றார்.

கடந்தாண்டு அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

Related posts

Mumbai: BMC Awaits Traffic Police NOC To Resume Road Concretisation On 309-Km Post-Monsoon

Madhya Pradesh Government Committed To Reduce Infant Mortality: Minister Savitri Thakur

‘Being Jats Our Dasshera Custom Of Blessing Weapons Reflected Our Warrior Heritage’: Bigg Boss 17’s Samarth Jurel Recalls Festivities Back Home (Exclusive)