மகளிர் டி20 தொடர்: நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

பிரிஸ்பேன்,

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலேயே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அமெலியா கெர் 4 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக சுதர்லேண்ட் மற்றும் வாரிஹாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 36 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 33 ரன்களும் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து ஆஸ்திரேலியா அசத்தியுள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்