மகளுக்கு பாலியல் தொல்லை: எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் உயிரிழப்பு – காரணம் என்ன..?

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா. இவர், மீது பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

பெங்களூருவில் உள்ள எடியூரப்பாவின் வீட்டுக்கு உதவி கேட்டு சென்றிருந்த போது 17 வயது மகளை வீட்டின் ஒரு அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண்ணின் தாய் புகார் அளித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் எடியூரப்பா மீது பதிவான இந்த போக்சோ வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 54 வயது பெண் மூச்சுத்திணறல் காரணமாக உளிமாவு அருகே பன்னரகட்டா ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென்று உயிர் இழந்தார்.

அந்த பெண், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர காரணமாக இருந்த பெண் உயிர் இழந்திருப்பது குறித்து சதாசிவ நகர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி