மகாராஜாவால் நெட்பிளிக்ஸ் ஈட்டிய வருவாய் இவ்வளவா?

மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி வருவாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.

தொடர்ந்து, மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியானது.

ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகள் பலரையும் பாதித்தது சமூக வலைதள விமர்சங்களில் காண முடிந்தது.

விடுதலை – 2: சர்வதேச திரையிடலுக்குப் பின்பும் 65 நாள்கள் படப்பிடிப்பு!

நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 (20 மில்லியன்) கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

MAHARAJA sebagus itu, gaes!
Gila banget penulisannya… hampir sempurna! Cuma tukang cukur nyari tong sampah aja bisa seseru ini.
Alur maju mundur justru bikin thriller-nya makin menggigit, lengkap dengan satir keras tapi lucu. Plot twist-nya nyesek banget sih. Recommended! pic.twitter.com/AYxZGhsx73

— Habis Nonton Film (@HabisNontonFilm) August 16, 2024

இந்தியளவில் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் சில விமர்சகர்கள் மகாராஜா படத்தைக் குறிப்பிட்டு சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் என்றதால் உலகளவில் பல பகுதிகளிலும் மகாராஜா பார்க்கப்பட்டு வருகிறது. சாதாரண பழிவாங்கல் கதைதான் என்றாலும் படத்தின் திரைக்கதையால் பெரிய அனுபவத்தைக் கொடுத்ததாக பலரும் குறிப்பிடுகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் மகாராஜா படத்தின் வெளியீட்டுக்குப் பின் அதிக சந்தாதாரர்களையும் விளம்பரங்களையும் பெற்றுள்ளதாம். இப்படத்தால் நெட்பிளிக்ஸ் ஈட்டிய வருமானம் கிட்டத்தட்ட ரூ. 150 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.

நெட்பிளிக்ஸால் ரூ. 17 கோடிக்கு வாங்கப்பட்ட மகாராஜா திரைப்படம் திரையரங்கிலும் ஓடிடியிலும் வசூலில் சக்கைபோடு போட்டது பல தயாரிப்பாளர்களிடம் பொறாமையையே ஏற்படுத்தியுள்ளதாம்!

Related posts

Mumbai: BEST Struggles To Meet Demand Of 3.5 Million Daily Passengers As Bus Fleet Shrinks Below 3,000

Navi Mumbai: 55-Year-Old Man Murders Live-In Partner Under Alcohol Influence In Panvel; Accused Previously Served Time For Wife’s Murder

Maharashtra Coastal Zone Authority Directs Raigad Collector To Probe CRZ Violations In Navi Mumbai PMAY Scheme