மகாராஷ்டிரத்தில் 12 நக்சலைட்டுகள் கொலை!

மகாராஷ்டிரத்தில் 12 நக்சலைட்டுகள் கொலை!மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 12 பேர் கொல்லப்பட்டனர். கோப்புப் படம்ஏ.என்.ஐ.

மகாராஷ்டிர எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிரம் – சத்தீஸ்கர் எல்லைப் பகுதியில் உள்ள கச்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கச்சிரோலி மாவட்டத்தின் வான்டோலி கிராமப் பகுதியில், இன்று பிற்பகல், சி-60 கமாண்டோ படையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் நடத்தி முன்னேறினர். நக்சலைட்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.

சுமார் 6 மணிநேரம் இருதரப்புக்கும் இடையே இந்த மோதல் நீடித்ததாக கச்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், 2 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், நக்சலைட்டுகளிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள் 3, ரைபில் 2, கார்பைன் ரக துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு