மகாராஷ்டிரம்: கல்வீச்சில் 21 போலீஸார் காயம்!

மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் மீது சிறுபான்மையினர் நடத்திய தாக்குதலில் 21 21 போலீஸார் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து ஆன்மிக குருவான யதி நரசிங்கானந்த் மஹாராஜ் என்பவர், நபிகள் நாயகம் குறித்த அவதூறு கருத்துகளை தெரிவித்ததற்கு எதிர்த்து பலரும் கருத்துகள் தெரிவித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் நரசிங்கானந்த் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்க சென்ற சிறுபான்மையினர், வெள்ளிக்கிழமை (அக். 4) இரவு 8.15 மணியளவில் மகாராஷ்டிரத்தில் உள்ள அமராவதி நகரில் நாக்புரி கேட் காவல் நிலையத்திற்கு சென்றனர்.

இதையும் படிக்க:மட்டன் பிரியாணி, சிக்கன் தொக்கு: இது துர்கா பூஜைக்கான சிறப்பு மெனு!

அவர்களுடன் சமாதானப் பேச்சில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது, சிலர் கற்களைக் கொண்டு வீசி, தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சிறுபான்மையினரைக் கலைப்பதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் மீது கற்களை வீசி நடத்திய தாக்குதலில், 21 காவல் அதிகாரிகள் காயமடைந்தனர்; 10 காவல் நிலைய வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இறுதியாக, தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கலைத்தனர். மேலும், அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, 1200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், நாக்புரி கேட் பகுதியில் பி.என்.எஸ்.எஸ். பிரிவு 163 கீழ் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!