மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும்: சந்திரபாபு நாயுடு

ஹரியாணாவைப்போல மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தில்லி சென்று திரும்பிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடிக்கடி நடைபெறும் தேர்தல் நடைமுறைகளால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைகிறது. இந்நிலையைப்போக்க "ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளால் அங்கு இயல்பு நிலை திரும்பியதோடு மட்டுமின்றி நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி, மக்கள் நலன், நல்லாட்சி ஆகியவற்றை நரேந்திர மோடி அரசு கொடுத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில பேரவைத் தேர்தல்களிலும் பாஜக இதே வெற்றியைப் பெறும். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜம்மு-காஷ்மீரில் வாக்குகள் சிதறியுள்ளன. ஹரியாணாவில் பாஜக பெற்ற வெற்றி வரலாற்று வெற்றியாகும்.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலக அளவில் பெரும் பொருளாதார சக்தி படைத்த நாடாக மாறும். ஆந்திரத்தில் கடந்த 5 ஆண்டுகள் நடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியால் மாநிலத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது என்றார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக