மகாராஷ்டிரம்: பேரவை வளாக மாடியிலிருந்து குதித்த பேரவை துணைத்தலைவர்!

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் தங்களை பழங்குடி வகுப்பில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்த பேரவை துணைத்தலைவர் உள்பட எம்.எல்.ஏ.க்கள் 3 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.

மகாராஷ்டிரத்தில் நீண்ட காலமாகவே தங்கர் இனத்தவர், தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வகுப்பில் சேர்க்குமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக இருக்கும் தங்கட் இனத்தவர் போலவே, தங்கர் இனத்தவர்களும் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் தலைமைச் செயலகமான மந்திராலயத்தில் இன்று (அக். 4) முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் முதல்வரிடம் இடஒதுக்கீடு குறித்து கோரிக்கை விடுத்தனர்.

Maharashtra state assembly deputy speaker & DCM Ajit Pawar led NCP factions MLA Narhari Zirwal & other ST reserved seats elected MLAs breached police security & jumped at the safety net at Mantralaya in protest against state govt for not recruiting tribal youths under PESA act. pic.twitter.com/6kHwp8PGIv

— Sudhir Suryawanshi (@ss_suryawanshi) October 4, 2024

ஆனால், முதல்வரின் பதிலால் எம்.எல்.ஏ.க்கள் திருப்தி அடையவில்லை. இதனையடுத்து, மகாராஷ்டிர பேரவையின் துணைத்தலைவர் நர்ஹரி ஜிர்வால் உள்பட சில எம்.எல்.ஏ.க்கள், மந்திராலயத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்தனர்.

இருப்பினும், வளாகத்தினுள்ளே பாதுகாப்பு வலை இருந்ததால், யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!