மகாராஷ்டிர தேர்தலில் அஜித் பவார் அணிக்கு கடிகார சின்னம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியே கடிகார சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவாருக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், உச்ச நீதிமன்றம், அஜித் பவார் அணிக்கு, நீதிமன்றத்தைன் முந்தைய உத்தரவுகளை பின்பற்றுமாறும், தங்களது தேர்தல் விளம்பரங்களில், இதுதொடர்பான தகவலையும் தெளிவுபடுத்த வேண்டும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் சின்னத்தை, அஜித் பவார் அணிக்கு வழங்கி, தேர்தல் ஆணையம் அளித்த முடிவினை எதிர்த்து சரத் பவார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதையும் படிக்க.. உங்களை விட சிறந்த எம்.பி.யாக பிரியங்கா இருப்பாரா? ராகுலின் கலகலப்பான பதில்

கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சிலிருந்து பிரிந்து பாஜகவுக்கு ஆதரவளித்ததால் அஜித் பவார் அணி உருவானது. அதாவது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். அவருக்கு மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.

மேலும் அவருடன் 8 எம்எல்ஏக்களும் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா். மேலும், 40 எம்.எல்.ஏ.க்களும், எம்.எல்.சி.க்களும் தனக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அஜித் பவார் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தனக்குச் சொந்தமானது என்று கூறி கட்சி மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினார் அஜித் பவார். ஆதரவாளர்களின் விவரங்களைக் கோரிய தேர்தல் ஆணையம், அஜித் பவார் அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை வழங்கியது. மகாராஷ்டிர மாநில தேர்தலிலும் கட்சியின் சின்னமான கடிகார சின்னம் அஜித் பவார் அணிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்