மகாராஷ்டிர தேர்தல்: பாஜகவுடன் உத்தவ் தாக்கரே (சிவசேனை) பேச்சுவார்த்தை?

இந்திய அரசமைப்பின் எதிரிகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனை(உத்தவ் அணி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.

எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்), உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் பெரும் பின்னடவைச் சந்தித்தது. அதே நிலை பேரவைத் தோ்தலிலும் நீடித்தால் எளிதில் வெற்றி பெற முடியும் என எதிா்க்கட்சிகள் கணித்துள்ளன.

இதையும் படிக்க: தமிழகத்தில் இளம் பருவத்தினரில் 50% பேருக்கு ரத்த சோகை! – அதிர்ச்சித் தகவல்

பாஜகவுடன் உத்தவ் தாக்கரே(சிவசேனை) பேச்சுவார்த்தை?

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி(எம்விஏ) கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மகாராஷ்டிரம் சென்றிருந்தபோது, மகாராஷ்டிர துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸை சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசியிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதனை சிவசேனை(உத்தவ் அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மறுத்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய இளம்பெண்களிடையே அதிகரிக்கும் மாா்பக புற்றுநோய்!

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “எம்விஏ கூட்டணியில் ஓரிரு இடங்களில் மட்டுமே இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடிக்கிறது. இந்நேரத்தில், தேசத்தின் நலன் கருதி சில தியாகங்களைச் செய்தாக வேண்டும்.

கடந்த மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்காக, எங்கள் கட்சிக்கு செல்வாக்குமிக்க அமராவதி, கோல்ஹாபூர் மற்றும் ராம்டேக் ஆகிய 3 இடங்களையும் பெரிய மனதுடன் விட்டுக்கொடுத்தோம். இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது விதர்பா தொகுதியை சிவசேனைக்கு அளிக்கலாம்.

நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும், தங்கள் கட்சித் தொண்டர் தேர்தலில் களமிறக்கப்பட வேண்டுமென்றே விரும்பும். ஆனால், கூட்டணியில், அதிலும் குறிப்பாக தொகுதிப் பங்கீட்டில் ஒவ்வொருவரும் ஒரு சில தியாகங்களைச் செய்தாக வேண்டும்.

தியாகம் செய்வது என்பது விஷயமல்ல. மாறாக, தேச நலன், மகாராஷ்டிரத்தின் நலன் ஆகியவற்றைக் குறித்தான விஷயம் இது. நாங்கள்(சிவசேனை) மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது தாராள மனதுடன் செயல்பட்டுள்ளோம். ஏனெனில், அரசமைப்பின் எதிரிகளை நாம் தோற்கடிக்க வேண்டும். அந்த வகையில், இன்று, மகாராஷ்டிரத்தில் ஊழல் அரசை அதிகாரத்திலிருந்து நாம் அகற்ற வேண்டும்” என்றார்.

இதையும் படிக்க:அதிமுகவில் நடிகை கெளதமிக்கு முக்கிய பொறுப்பு!

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி