மகாராஷ்டிர பேரவைக்கு நவ.20-ல் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

புது தில்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் பேரவைகளுக்கான தேர்தல் மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஒரு கட்டமாகவும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க.. புயல் சின்னம் எங்கே கரையை கடக்கும்? அடுத்த 3 நாள்களுக்கான தகவல்!

மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரு கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதி என இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 13-ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது