மகிழ்ச்சியான செய்தி சொல்லும் தங்கம் விலை நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாற்றமின்றி இருந்த நிலையில், செவ்வாயன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனையானது.

நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.56,960க்கு விற்பனையானது. இன்று 200 ரூபாய் குறைந்து ரூ.56,960க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.56,960-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை தங்கம் விலையில் எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.7,120-க்கும், பவுன் ரூ.56,960-க்கும் விற்பனையானது.

திங்கள்கிழமை மாற்றமின்றி காணப்பட்ட நிலையில், இன்று ரூ.200 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.25 குறைந்து ரூ.7,095க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.7550க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.60,400க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை தொடர்ந்து நான்காவது நாளாக மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.103க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கு விற்பனையாகிறது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது