மக்களவையில் தாக்கலானது வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட மசோதா

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்த மசோதாவில் வக்ஃபு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.

விளம்பரம்

இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் வக்ஃபு வாரியத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் வகையில் சட்ட திருத்தம் உள்ளது மத நம்பிக்கைக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: தமிழக விஞ்ஞானி வீர முத்துவேல் உட்பட 33 பேருக்கு ராஷ்ட்ரீய விஞ்ஞான் புரஸ்கார் விருது அறிவிப்பு !

இதனிடையே, வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அதிருப்தி அடைந்த மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவையில் இருந்து வருத்தத்துடன் வெளியேறினார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Parliament
,
PM Modi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்