மக்களவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் வென்ற சீட்கள் எவ்வளவு?

பாஜக, காங்கிரஸ் வென்ற சீட்கள் எவ்வளவு? கூட்டணி கட்சிகள் வென்றது எவ்வளவு?

காட்சிப் படம்

நாட்டின் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்தது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் ஆந்திராவின் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒடிசாவின் 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களை மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றியது. எனினும், பாஜகவால் 272 என்ற தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையை பெறமுடியவில்லை. அந்தவகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும 240 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. இதனால் கூட்டணி அமைத்தே ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7, லோக் ஜனசக்தி 5, ஜனசேனா 2 என மொத்தம் 292 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மொத்தம் 234 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை வசப்படுத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களையும், திமுக 22 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைப் பெற, இன்னும் 38 இடங்கள் தேவை.

விளம்பரம்

தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவை பெற இந்தியா கூட்டணி முயற்சிக்குமா என்ற எதிர்பார்பும் மேலோங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சி, இந்த முறை 99 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் கைகொடுத்துள்ளன. அந்த வகையில் 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி 43 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

விளம்பரம்

கேரள மக்களவைத் தேர்தல் வரலாற்றில் பாஜக முதல் முறையாக கால் பதித்துள்ளது. திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றியை பதிவு செய்துள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமாரைவிட 74686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதேபோல் ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பிஜூ ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி வாடிக சூடியுள்ளன.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Congress
,
Lok Sabha Election 2024

Related posts

ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி- அமித்ஷா உறுதி

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு