மக்கள்தொகை கணக்கெடுப்பில் ‘சாதி’ சேர்க்கப்படுமா? – மத்திய அரசு ஆலோசனை!

நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதியை சேர்ப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக அந்தப் பணியை மத்திய அரசு ஒத்திவைத்தது.

மருத்துவர்களை 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைத்த மமதா!

முன்னதாக, 2011 ஆம் ஆண்டு 'சமூக-பொருளாதார மற்றும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு' நடத்தப்பட்டது. ஆனால் அதன் தரவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

எனினும் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகள் கொள்கைகளை வகுத்து மானியங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

தமிழகத்தில் இரு நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

இதையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியைத் தொடங்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபமாக அதிகம் வலியுறுத்தி வருகின்றன. பிகாரில் ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பாஜக அல்லாத மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சித்து வருகின்றன.

இதனால் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி குறித்த கணக்கெடுப்பையும் மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் ஆனால் அதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டி20 தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் லியம் லிவிங்ஸ்டன்!

இப்போது இயக்கியிருந்தால் அம்பிகாபதியை வேறு மாதிரி எடுத்திருப்பேன்: ஆனந்த் எல். ராய்

ஆந்திர வெள்ள நிவாரணம்: ரூ.25 கோடி வழங்கிய அதானி அறக்கட்டளை!