மசோதாக்களைக் காரணமின்றி நிறுத்தி வைக்கிறார் ஆளுநர்: அப்பாவு குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் எந்தக் காரணமுமின்றி ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

தில்லியில் மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா தலைமையிலான காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிராந்திய கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு,

'சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களை எந்தக் காரணமும் கூறாமல் ஆளுநர் நிறுத்தி வைக்கிறார். மக்களவை, மாநிலங்களவை மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஓரிரு மணி நேரங்களில் ஒப்புதல் வழங்குகிறார்.

இதையும் படிக்க | ‘பாஜகவின் அறிவுரை வேண்டாம்’ – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரி செல்ஜா!

ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேறும் மசோதாக்கள் பல ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கிறது. மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போகிறது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை செயல்படுத்த முடியவில்லை. பேரவையை அவமதிப்பது அந்த பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதாகும்' என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க | பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

முன்னதாக, தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி